Skip to main content

இப்படியும் யோசிக்கலாமே!

சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த என் நண்பனும், அவன் மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். என் மனைவியிடம், நண்பனின் மனைவி, 'அக்கா... என் கணவர் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு ஓயாம சொல்றாரு; உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி, வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுங்க; அவரு சொன்னா கேட்பாரு...' என்றிருக்கிறார். இதை, அவர்கள் சென்ற பின், என்னிடம் கூறினாள், என் மனைவி.
மறுநாள், நண்பனை சந்தித்து, 'என்னடா... உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா... தனிக்குடித்தனம் போகலாம்ன்னு சொல்றியாமே... உன் மனைவி ரொம்ப வருத்தப்பட்டு, என் மனைவிகிட்ட சொல்லியிருக்காங்க...' என, கண்டிக்கும் தோரணையில் கேட்டேன்.

முதல் குழந்தைக்கும் பரிசு கொடுக்கலாமே!

சமீபத்தில், என் உறவினர், தனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருப்பதாக கூறி, அவர் வீட்டிற்கு அழைத்தார். அதனால், நானும், என் மனைவியும் பிறந்த குழந்தைக்கு பரிசு பொருள் வாங்க சென்றோம். அப்போது, என் மனைவி, உறவினருக்கு மூத்த மகன் இருப்பதை நினைவுபடுத்தி, 'இக்காலத்து குழந்தைக, தங்களோட தங்கை, தம்பிக்கு கிடைக்கிற பொருட்கள் தனக்கும் வேணும்ன்னு ஆசைப்படுவாங்க. அப்படி கிடைக்கலன்னா, அந்த கோபத்தை அவங்க மீது, காட்டுவாங்க. அதனால, உங்க உறவினரோட ஐஞ்சு வயசு மூத்த மகனுக்கும் ஏதாவது ஒரு பரிசு பொருளை வாங்குங்க...' என்றாள். அதேபோன்று, அவனுக்கும் பரிசுப் பொருள் வாங்கி, உறவினர் வீட்டுக்கு சென்றோம். 

பொங்கி எழுங்கள் ஜனாதிபதி அய்யா!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, பிப்., 24ல், தமிழக சிறைச் சாலைகளிலுள்ள, 1,860 பயங்கர கிரிமினல் குற்றவாளிகளை விடுவிக்கப் போகின்றனராம்!

ஊழல் குற்றவாளி என, உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பிறந்த நாளில், குற்றவாளிகளை விடுவிக்க முன் வருவது, உலகிலேயே இது தான் முதன்முறை! அந்த, உலக சாதனையை நிகழ்த்த முன் வந்தவர், முதல்வர் பழனிசாமி!

Subscribe to இது உங்கள் இடம்