Skip to main content

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித் தொடர்ந்து முதலிடம்!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதால், இந்திய அணி கேப்டன் கோலி தொடர்ந்து 2 வது இடத்தில் உள்ளார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பின்னால் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய ரபேல் நடால், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 

இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

சவால் நிறைந்த இறுதி போட்டி:

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டியில் முதன்முறையாக நுழையும் பியான்கா!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

19 வயது நிரம்பிய பியான்கா, கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளார். அத்துடன், கனடா இளம் வீராங்கனைகளில் 2009-க்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார்.

பிஃபா உலகக்கோப்பை 2022: சின்னம் வெளியானது!!!

கத்தார் நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான சின்னத்தை அந்நாடு வெளியிட்டது, செவ்வாயன்று தோஹா மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பொது இடங்களில் இந்த சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது.

போட்டி நடைபெற உள்ள 2022 ஆண்டைப் போலவே உள்ளூர் நேரத்திலும் சரியாக 20:22 மணிக்கு சின்னத்துடன் ஒளிரப்பட்டது.

இந்த சின்னம் மிகவும் நேர்த்தியானது மற்றும் கத்தார் கொடியின் (பர்கண்டி) நிறத்துடன் உள்ளூர் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.

இந்த சின்னம் மாட்ரிட், புனஸ் எயர்ஸ் மற்றும் பெய்ரூட் மற்றும் பல முக்கிய நகரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-3,4-6,6-3,4-6,2-6 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

தோல்வி அடைந்த ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார். 

Grigor Dimitrov Stuns Roger Federer At U.S. Open To Spoil Chance at Federer-Nadal Final

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம்!

ஜமைக்காவில் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதிய இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இருப்பினும் இந்திய கேப்டன் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.

இதனால் அவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் விராட் கோலியை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Steve Smith: Australia batsman returns to top of Test rankings

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

கிங்ஸ்டனில் நடந்த 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் கிளிஞ்ச்ஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஒரே மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று சர்வதேச டி 20 போட்டிகள்:

செப்டம்பர் 15 - தர்மசாலா,
செப்டம்பர் 18 - மொஹாலி,
செப்டம்பர் 22 - பெங்களூரு.

பி.வி சிந்துவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து!

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

யுஎஸ் ஓபன்: முதல் சுற்றில் ரோஜரை கதிகலங்க வைத்த இந்திய வீரர்!

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.  

இதில் உலகின் மூன்றாம் நிலை  வீரர் ரோஜர் பெடரரை இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

Subscribe to #sports