Skip to main content

இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது - அபிஜித் பானர்ஜி!

இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்படுகிறது என்று நோபல் விருது பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கான 2019 ஆம் ஆண்டின் நோபல் பரிசை தனது மனைவி எஸ்தர் மற்றும் ஹார்வர்டின் மைக்கேல் கிரெமருடன் இணைந்து, இந்திய-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்படுகிறது" என்று கூறினார்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, "எனது பார்வையில் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

நிதி அமைச்சகத்தின் கடன் மேளா - 81,700 கோடி ரூபாய்க்கு மேல் விநியோகம்!

கடன் முகாம்கள் மூலம் 9 நாட்களில் பொதுமக்களுக்கு 81,700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
 
பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. 

நிதி அமைச்சகத்தின் "கடன் மேளா" - தமிழகத்தின் 5 மாவட்டங்கள் தேர்வு!

மத்திய அரசு முதற்கட்டமாக நாடு முழுவதும் 250 மாவட்டங்களை தேர்வு செய்து கடன்மேளா நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, திருப்பூர், கோவை, ஊட்டி, திருவள்ளூர், கடலூர், வேலூர், கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் உள்பட 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் கடன் மேளாவில் கலந்து கொள்கின்றன.

மத்திய நிதி அமைச்சகம் சார்பில் 250 மாவட்டங்களில் இன்று முதல் கடன் முகாம்கள்!!!

இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதேபோல சில நாட்கள் முன்பு நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டத்தில், அடையாளம் காணப்பட்ட 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 

பின்னர் தனியார் வங்கிகளும் இந்த திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தன.

அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரி குறைப்பு அறிவிப்பு: சிறப்பம்சங்கள்

வளர்ச்சி மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்காக பெருநிறுவன வரி குறைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான பிற நிதி நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

உள்நாட்டு நிறுவனங்கள் எந்தவொரு சலுகைகள் / விலக்குகளையும் பெறாததால் பெருநிறுவன வரி விகிதம் 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது; முந்தைய விகிதம் 30 சதவீதம் ஆகும்.

அத்தகைய நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் இப்போது செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட 25.17 சதவீதமாக உள்ளது; முன்னதாக இது 34.94 சதவீதமாக இருந்தது.

இரண்டு தவணையாக கடன் முகாம்கள் நடத்தப்படும் - நிதி அமைச்சர்!

தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும் என்பதால் கடன் முகாம்கள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி சர்வதேச நாணய நிதியம் கூறுவது என்ன?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட ‘மிகவும் பலவீனமாக உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட "மிகவும் பலவீனமாக உள்ளது" என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதனால், நாட்டில் பெருநிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது எனவும்.

சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனங்களுக்கு இதுவே காரணம் என்றும் கூறியுள்ளது.

வாரா கடன்களை மீட்டெடுக்க வங்கி இணைப்பு உதவாது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வங்கிகளை ஒன்றிணைப்பதில், வாரா கடன்களை மீட்டெடுக்க முடியாது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) உயர் அதிகாரி தெரிவித்தார்.

10 பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பதை எதிர்த்து, AIBEA இன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி சீர்திருத்தங்கள் என்ற பெயரில், பெருநிறுவனங்களுக்கு உதவ வங்கிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

வங்கிகளின் மெகா இணைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

டெல்லியில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

வங்கிகள் இணைக்கப்படுவதால் 27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். 

7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தொழில்துறையில் வேகத்தை அதிகரிக்க - பாஜக அரசின் இரட்டை திட்டங்கள்!

தொழில்துறையில் வேகத்தை அதிகரிக்க இரண்டு பெரிய நடவடிக்கைகளை மோடி அரசு அறிவிக்க உள்ளது.

நாட்டில் நுகர்வுக்கு ஒரு உந்துதல் கொடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, தொழில்துறைக்கு இரண்டு பெரிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளது.

செலவினங்களை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், ஆட்டோமொபைல் சந்தையில் மந்தநிலையைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜிஸ்டி நிலுவை தொகை:

Subscribe to பொருளாதாரம் சரிவு