Skip to main content

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இந்த மழை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்தது. 

இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல்!!!

ராமேஸ்வரம்: சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது இந்திய கடலோர காவல்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக தமிழக மீனவ குழுவை சேர்ந்த சிலர் குற்றஞ்சாட்டினர்.

மண்டபம் பகுதிக்கு உட்பட்ட கடலோர காவல்படை தளபதி, ஜி மணி குமார், குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

​​வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் கொண்ட கடலோர காவல்படை குழு, மீனவர்களிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாததால் அவர்களை கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

முதல்வரின் அடுத்த வெளிநாட்டு பயணம் - இஸ்ரேல்!!!

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

தனது 14 நாள் பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், தனது அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்துள்ளார்.

தனது அடுத்த பயணம் இஸ்ரேலுக்கு எனவும், அந்த நாட்டில் பின்பற்றப்படும் திறமையான நீர் மேலாண்மை நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே இந்த பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு - தலைமைச் செயலாளர் ஒப்புதல்!

தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்துவதைப் போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழகம் திரும்பினார் முதல்வர்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

முதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். 

தமிழக மின்சார வாரியத்தில் நிதி நெருக்கடி - மின் இணைப்பு தொகை அதிகரிக்க வாய்ப்பு!

கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது உட்பட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

எனவே அதனை மீட்டெடுப்பதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு அளித்த மின்சார வாரியம் வைப்பு தொகை ரூ.1,600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.4,600 ஆக மாற்றி அமைக்கும்படி கூறி இருந்தது.

நாளை தமிழகம் வருகிறார் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி!

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு இரண்டு வார கால அரசுமுறை பயணத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி நாளை செப்டம்பர் 10 ஆம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும், இந்தியாவில் பிரதிபலிக்க பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் அவர் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள முக்கியமான நகரங்களுக்குச் சென்றார்.

முழு கொள்ள‌ளவை எட்டியது மேட்டூர் அணை: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

மேட்டூர் அணை

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மத்திய அரசு விருது!!!

"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்" என்ற திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, பெண் சிசுக்களின் பிறப்பு சதவீதத்தை உயர்த்திய நாமக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி அரியானாவில் துவங்கி வைத்தார். 

முதலில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

Subscribe to tamilnadu