Skip to main content

பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு 2020: முக்கிய தேதிகள் அறிவிப்பு!

தேசிய கல்வி வாரியம் (என்.பி.இ) 2020 ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் எம்.டி.எஸ் 2020) பதிவுசெய்தல் செயல்முறையைத் துவங்கியது. 

NEET MDS 2020 பதிவு இணைப்பு அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் nbe.edu.in இல் உள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆர்வமுள்ள மருத்துவ மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MDS நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை அக்டோபர் 31, 2019 அன்று இரவு 11:55 மணி வரை பூர்த்தி செய்யலாம்.

உத்தரபிரதேச மருத்துவ பட்டதாரிகள் அனைவரும் கிராமங்களில் பணியாற்ற புதிய அரசாணை!

உத்தரபிரதேச மாநிலத்தில் எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவ பட்டதாரிகள் கட்டாயமாக கிராமங்களில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதல்வர், இதற்கான ஒப்பந்தங்களில் மருத்துவர்கள் கையெழுத்திடவேண்டும் என்று புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளார்.

நீட் 2020 : மே 3-இல் தேர்வு - எப்போது விண்ணப்பிக்கலாம்?

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 2019- 2020-ம் கல்வி ஆண்டின் நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு, மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும். 

இந்த தேர்வுக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

https://nta.ac.in/

Subscribe to மருத்துவம்