Skip to main content

ஐஎன்எக்ஸ் வழக்கில் பல தடைகளை தாண்டி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்!!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில், சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த மறுநாளே, அமலாக்கத்துறை அவரை மீண்டும் கைது செய்தது.

சிறை சென்றதில் இருந்து பலமுறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உட்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிதம்பரத்தின் ஜாமீன் மனு: மீண்டும் ஒத்திவைப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிப்பதை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரது நீதிமன்ற காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

பா.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கதுறை அதிரடி நடவடிக்கை!!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கதுறை விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மன்மோகன் சிங்கின் அறிவுரையை பாஜக அரசு கேட்க வேண்டும் - சிதம்பரம் ட்வீட்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் நாள்தோறும் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் ப.சிதம்பரம் சார்பில் இன்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

திகார் சிறையில் சிதம்பரம் ‍‍- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறைச்சலையில் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு: அக்டோபர் 3 வரை சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு!!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் சிதம்பரம் ‍‍- காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு!

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் சிபிஐ காவலில் உள்ள முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல் சந்தித்து பேசினர்.

அவர்களுடன் சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சரண் மனு தள்ளுபடி!!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
 
சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை எனவும், தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

Subscribe to inx media case