Skip to main content

Breaking news

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல்!!!

இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி.

காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே,  ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

விரைவில் ஓய்வு பெறவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பின்னர் அந்த பதவியில் யாரை நியமிக்கலாம்? என்று பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-11-2019 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

அதற்கிடையில், தனக்கு அடுத்தபடியாக இந்த பதவியை யார் ஏற்கலாம்? என்று தலைமை நீதிபதி ஒருவரை சுட்டிக்காட்டுவது இயல்பு.

அவ்வகையில், தனக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் எஸ்.ஏ.பாப்டே-வின் பெயரை பரிந்துரைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் திமுக எம்எல்ஏ வீட்டில் இருந்து பணம் பறிமுதல்!!!

நாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த அம்பலம் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் மறுப்பு!

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

நெருங்கும் தேர்தல்: ஹரியானாவில் மோடி, ராகுல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய இருப்பதால் இன்றும் நாளையும் இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் அரியானாவில் இரண்டு நகரங்களிலும், மகாராஷ்டிரத்தில் ஒரு இடத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

வெள்ள எச்சரிக்கை: சென்னையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்!

சென்னையில் ஒரு "புத்திசாலித்தனமான வெள்ள எச்சரிக்கை முறையை" பயன்படுத்த தமிழகம் தயாராக உள்ளது, இந்த முறை மழைக்காலங்களில் பகுதி வாரியாக நீரில் மூழ்கும் விவரங்களை பெற அதிகாரிகளுக்கு உதவும்.

CFLOWS எனப்படும் தொழில்நுட்பம் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்பு ஆகும். 

பேரழிவுகரமான 2015 சென்னை வெள்ளத்திற்குப் பிறகு, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் இது கருத்துருவாக்கப்பட்டது.

இறுதி கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவலால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

நவம்பர் 30-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர், சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

5 நீதிபதிகளும் இன்று தங்கள் அறைகளில் இருப்பார்கள்; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அயோத்தி வழக்கு: இரு தரப்பு வாதம் நிறைவு!

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக நடைபெற்ற அயோத்தி வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. 

மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், "வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று 40-வது நாளாக நடைபெற்றது.

ஜம்முவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் ‍- உளவுத்துறை எச்சரிக்கை!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது.

சிறப்பு அந்தஸ்து பறிபோனதால் காஷ்மீர் அரசியல் தலைவர்களும், பிரிவினைவாதிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கக் கூடும் என்பதால் கடந்த 2 மாதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு இருந்தன.

சவுதியில் பேருந்து விபத்து: புனித பயணம் மேற்கொண்ட 35 பேர் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் என சவுதி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

மேற்கு சவுதி அரேபியாவிற்கு அருகே, ஒரு தனியார் பயணிகள் பேருந்து, கனரக வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

Subscribe to Breaking news