Skip to main content

S-400 ரக ஏவுகணைகளை 19 மாதங்களுக்குள் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா திட்டம்!

இந்திய பாதுகாப்பு துறைக்கு எஸ் -400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அடுத்து வரும் 18-19 மாதங்களுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

"இதற்கான முன் பணம் இந்தியாவிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது, அனைத்து ஏவுகணைகளும் சுமார் 18-19 மாத கால அட்டவணையின்படி இந்தியாவிற்கு வழங்கப்படும்" என்று ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

2024 ஆண்டிற்குள் புதிய இந்தியாவை கட்டியெழுப்ப இலக்கு!!!

2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா இலக்கு வைத்துள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிற நாடுகளின் சகாக்களுடன் கலந்துரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும், இது 2024 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.

 

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு!

ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதிநிதி ஷின்சோ அபேவை நேரில் சந்தித்தார், இரு தலைவர்களும் இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகள் உட்பட பல பகுதிகளில் வலுவான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த உறுதியளித்தனர்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார் இந்திய பிரதமர் மோடி. ரஷ்ய தூர கிழக்கு பிராந்தியத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி தற்போது பெறுகிறார்.

கிழக்கு பொருளாதார உச்சிமாநாடு - ரஷ்யா செல்கிறார் நரேந்திர மோடி!

கிழக்கு பொருளாதார மன்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை ரஷ்யாவிற்கு 3 நாள் சுற்றுபயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாள் பயணத்தின் போது ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 20 வது ஆண்டு உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

உலக திறன் போட்டி - இந்திய அணிக்கு நான்கு பதக்கங்கள்!

ரஷ்யாவில் நடைபெற்ற 45 வது உலக திறன் போட்டியில், இந்திய அணி புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. 2007 ஆம் ஆண்டு நிகழ்வில் முதன்முதலில் பங்கேற்றதிலிருந்து சிறந்த செயல்திறனில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

2017 ஆம் ஆண்டில், இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மற்றும் ஒன்பது பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றியாளர்கள்:

25 வயதான எஸ்.அஸ்வதா நாராயணா நீர் தொழில்நுட்பத்தில் (Water Technology) தங்கப்பதக்கம் வென்றார்.

ரஷ்யாவில் சர்வதேச இராணுவப் பயிற்சி - இந்தியா பாகிஸ்தான் பங்கேற்பு!

இந்தியா பாகிஸ்தான் இடையே அதிகரித்துவரும் பதற்றம் ஒரு பக்கம் இருப்பினும், இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டமைப்பின் கீழ் சீனா மற்றும் ஐந்து நாடுகளுடன் ஒரு மெகா இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த பயிற்சி செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை ரஷ்யாவின் ஓரன்பேர்க்கில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.!!

ரஷ்யாவை சேர்ந்த மாஃபியா குழுவினர் வெளியிட்ட ரகசிய வீடியோ இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ரகசியமான வீடியோவில் பண்டைய எகிப்து காலத்தைச் சேர்ந்த வேற்றுக்கிரக வாசிகளின் எச்சங்கள் காணப்படுகின்றன.

 

உலக அரசியல் : ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்; கேட்டதும் திணறிப்போன நாசா.!

யார் முதலில் நிலவில் காலடி பதிக்கிறார்கள் என்று, சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்த டோட்டி ஞாபகம் இருக்கிறதா.? அதுதான் ஸ்பேஸ் வார் (Space War) - விண்வெளி ஆராய்ச்சிகளில் உலக நாடுகளுக்குள் நடக்கும் முன்னிலை சார்ந்த போட்டி.!

Subscribe to ரஷ்யா