Skip to main content

பெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ... #BlackPanther படம் எப்படி?

வழக்கம்போல சூப்பர்ஹீரோ படங்களுக்கே உரித்தான சகோதர யுத்தம்தான் பிளாக் பேந்தர். ஆனால், மார்வெல்லுக்கு முதல்முறையாக ஒரு ஹீரோ, கதையின் தேவைக்காக ஒரு வில்லன் என பெர்ஃபெக்ட்டாக வந்திருக்கிறது பிளாக் பேந்தர் Black Panther. இதற்கு முன் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய டிசியின் வொண்டர் வுமனுக்கு இப்படியொரு கதைக்களம் அமைந்தது.

ஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா?!

ண்ணீருக்கு உருவம் உண்டா? இல்லை. ஆனால், அது எதில் இருக்கிறதோ அந்த உருவத்தை எடுத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது. குடுவை, சிறு குழி, குளம், கடல் - அளவுகளைப் பற்றி ஆராயாமல் பேரன்போடு எல்லாவற்றிலும் தன்னை நிறைத்துக்கொள்ளும். காதலும் அப்படித்தான். அன்பு யாரிடமிருந்து வெளிப்படுகிறதோ, அவர்கள் உருவத்தைப் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளை மட்டும் இனங்கண்டு, தன்னை வெளிப்படுத்தும். பிரதிபலிக்கும். 

'ஸா, ஃபியூரியஸ் -7, கான்ஜூரிங்... படைப்புக்காக எதுவும் செய்வார் ஜேம்ஸ் வான்!'

`பேய்' என்று சொன்னாலே பத்தடி தள்ளி நிற்கும் ஆட்கள் நிறையவே உண்டு, அதில் நானும் ஒருவன். அப்படி இருக்கையில் பேய், அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே இயக்குவதை குலத்தொழிலாக செய்து வருபவர் ஜேம்ஸ் வான். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

ஆஸ்கர் பட்டியலில் இரண்டாம் உலகப்போர் சொல்லும் இரு படங்கள்.. இரு பார்வை!

இரண்டாம் உலகப் போரால் நிகழ்ந்த ஒரே நன்மை இலக்கியத்துக்கும், சினிமாத்துறைக்கும்தான். எண்ணற்ற படங்களும், சிறுகதைகளும், நாவல்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல மொழிகளிலிருந்தும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கரில் நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் தயாரித்த மட்பவுண்ட் இரண்டாம் உலகப்போரை மையப்படுத்திய புனைவு என்றால், டன்கிர்க்கும் , டார்க்கெஸ்ட் ஹவுரும் இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தியது.

'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர?!"

கேன்னபாக்ஸ் என்ற நிறுவனம் கஞ்சா செடியிலிருந்து இரு மாத்திரையை உருவாக்க மெக்ஸிகோவிற்குப் பயணப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அங்கு சென்றபின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வேலைப் பயணம், கொலைப் பயணமாக மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல்களுக்குள் ஒழிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதே, Gringo படத்தின் க்ளைமாக்ஸ். 

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகள் வென்றது 'கெட் அவுட்' 'கால் மீ பை யுவர் நேம்'
ஆஸ்கர் விருதுகளில் திரைக்கதைக்கான விருதை நேரடி திரைக்கதை ( 'ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே') தழுவல் திரைக்கதை ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே) என இரண்டுவிதமாகப் பிரித்து வழங்குவார்கள். இந்த வருடம் சிறந்த நேரடி திரைக்கதைக்கான ஆஸ்கரை (ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே) விருதை 'கெட் அவுட்' படத்துக்காக ஜோர்டான் பீலேவும், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே) ஆஸ்கர் விருதை 'கால் மீ பை யுவர் நேம்' படத்துக்காக ஜேம்ஸ் ஐவரி தட்டிச் சென்றனர்.
சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங் - நோலனின் 'டன்கிர்க்' மூன்று விருதுகள்

ஒரு படம், அதன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று.

துப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது?

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பிரச்னைகள். எந்தப் புதிய படமும் வெளியாகாவில்லை. இந்த நேரத்தில் டாம் ரைடர் படம் வெளியாகியிருப்பது அதற்கு கிடைத்துள்ள பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். உலகப் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரம் ஒன்றை முதன்மையாக கொண்டு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக வெளிவந்திருக்கும் Tomb Raider படம் எப்படி?

படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி?

`இகரஸ்’ என்பது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். இகரஸின் தந்தை டேடலஸ், அவருக்கு மெழுகால் செய்யப்பட்ட இறக்கைகளை அளித்து, கடலுக்கு மிக அருகிலும், சூரியனுக்கு மிக அருகிலும் பறக்கக் கூடாது என நிபந்தனை அளிக்கிறார். குறுகிய நிலப்பகுதியில் பறப்பதை விரும்பாத `இகரஸ்’ உயர உயர பறக்கிறார். சூரிய வெப்பத்தால் இறகுகளில் இருக்கும் மெழுகு உருக, கடலில் விழுந்து சாகிறார் `இகரஸ்’. இந்த கிரேக்க புராணக் கதை தன் லட்சியத்தை மீறிச் செயல்படுபவனின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

Subscribe to ஹாலிவுட்