Skip to main content

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரி குறைப்பு அறிவிப்பு: சிறப்பம்சங்கள்

வளர்ச்சி மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்காக பெருநிறுவன வரி குறைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான பிற நிதி நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

உள்நாட்டு நிறுவனங்கள் எந்தவொரு சலுகைகள் / விலக்குகளையும் பெறாததால் பெருநிறுவன வரி விகிதம் 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது; முந்தைய விகிதம் 30 சதவீதம் ஆகும்.

அத்தகைய நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் இப்போது செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட 25.17 சதவீதமாக உள்ளது; முன்னதாக இது 34.94 சதவீதமாக இருந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா பாலியல் வழக்கில் கைது!

பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா பாலியல் வழக்கில் கைது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது.

மாணவியிடம் விசாரணை:

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு: அக்டோபர் 3 வரை சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு!!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

இரண்டு தவணையாக கடன் முகாம்கள் நடத்தப்படும் - நிதி அமைச்சர்!

தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும் என்பதால் கடன் முகாம்கள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக அறிவிப்பு!

உத்தரகண்ட் அரசு 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை கட்டாய பாடமாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.

மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே கூறுகையில் "சமஸ்கிருதம் நமது பண்டைய மற்றும் கடவுளின் மொழி. இந்த மொழி நம் கலாச்சாரத்தை அளவிடமுடியாத அளவிற்கு வளப்படுத்தியுள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். எங்கள் தலைமுறை மொழியை அறிந்திருக்க வேண்டும். எனவே சமஸ்கிருதம் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது " என்றார்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: விவசாயிகளின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!

அகமதாபாத்: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்த 120 க்கும் மேற்பட்ட மனுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி ஏ எஸ் தேவ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடு நியாயமானது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அதிக இழப்பீடு பெற அரசாங்கத்தை அணுகலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை - இம்ரான் கான்!!!

ஐ.நா பொதுச் சபையில் "காஷ்மீர் வழக்கை" முன்வைக்க உறுதியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்காவிட்டால் இந்தியாவுடன் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜம்முவில் சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வரையில் இந்தியாவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர்!!!

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்தார். அவர், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார்.

இதன்பின் தேஜஸ் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பின்னர் விமானத்தில் பறந்தார்.  தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை துணை தளபதி என். திவாரி சென்றார்.

இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரோ ட்வீட்!

இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரோ, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

எங்களுடன் நின்ற உங்களுக்கு நன்றி.

உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்ள எங்களுக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கு நன்றி.

இவ்வாறு அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அயோத்தி வழக்கில் வாதங்களை நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் கெடு!

அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 18ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோருகின்றனர்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

Subscribe to இந்தியா