Skip to main content

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: பதக்கப்பட்டியலில் இந்தியா முதல் இடம்!

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தீபக் குமார் ஏழாவது இடத்தை பிடித்தார். எனவே, ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு தவறியது. 

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில் 87 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து டாப்-8 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஒரே மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று சர்வதேச டி 20 போட்டிகள்:

செப்டம்பர் 15 - தர்மசாலா,
செப்டம்பர் 18 - மொஹாலி,
செப்டம்பர் 22 - பெங்களூரு.

யுஎஸ் ஓபன்: முதல் சுற்றில் ரோஜரை கதிகலங்க வைத்த இந்திய வீரர்!

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.  

இதில் உலகின் மூன்றாம் நிலை  வீரர் ரோஜர் பெடரரை இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாதது வருத்தம்- தினேஷ் கார்த்திக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது வருத்தம் அளிக்கிறது என்று நிதாஹாஸ் முத்தரப்பு தொடர் ஹீரோ தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Subscribe to விளையாட்டு செய்திகள்