Skip to main content

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதலி ராஜ்!

சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதலி ராஜ் அறிவித்துள்ளார்.

வரும் 2021 ஆண்டின்  50 ஓவர் உலகக் கோப்பையை மனதில் வைத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதலி ராஜ் அறிவித்துள்ளார்.

36 வயதான மூத்த தொடக்க ஆட்டக்காரரான மிதலி, 32 டி 20 போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார். 

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

கிங்ஸ்டனில் நடந்த 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் கிளிஞ்ச்ஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: பதக்கப்பட்டியலில் இந்தியா முதல் இடம்!

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தீபக் குமார் ஏழாவது இடத்தை பிடித்தார். எனவே, ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு தவறியது. 

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில் 87 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து டாப்-8 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை, அதே நேரத்தில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் ஒரே மாற்றமாக ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று சர்வதேச டி 20 போட்டிகள்:

செப்டம்பர் 15 - தர்மசாலா,
செப்டம்பர் 18 - மொஹாலி,
செப்டம்பர் 22 - பெங்களூரு.

பி.வி சிந்துவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து!

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

யுஎஸ் ஓபன்: முதல் சுற்றில் ரோஜரை கதிகலங்க வைத்த இந்திய வீரர்!

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.  

இதில் உலகின் மூன்றாம் நிலை  வீரர் ரோஜர் பெடரரை இந்தியாவின் இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக ஆடிய சுமித் நாகல், ரோஜர் பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.

உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர்!!!

2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

பகல்- இரவு டெஸ்டில் நியூசிலாந்து-இங்கிலாந்து- ஆக்லாந்தில் நாளை தொடக்கம்.

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நாளை தொடக்குகிறது.

22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது..

திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லுமா சென்னை அணி

பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி இன்று பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் மோதுகின்றன.

 

Subscribe to விளையாட்டு