Skip to main content

பால்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இனி தேர்வுகள் நடத்த கூடாது !!!

பால்வாடிகளில் பயிற்சி வகுப்புகளில் பயிலும், எந்தவொரு குழந்தைக்கும் எழுத்து அல்லது வாய்வழி தேர்வு நடத்தக்கூடாது என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கமான என்சிஆர்டி கவுன்சிலின் கூற்றுப்படி, ஒரு குழந்தையை "வெற்றி" அல்லது "தோல்வி" என்று முத்திரை குத்துவது பால்வாடிகளின் நோக்கம் அல்ல என தெரிவித்துள்ளது.

எனவே எந்தவொரு குழந்தைக்கும் எழுத்து அல்லது வாய்வழி தேர்வு நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் தமிழகம் முதலிடம்!!!

நாட்டிலேயே, 2018 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

2018 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்டங்களை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 5,844 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது என்று அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (ஆயிஷ்) தெரிவித்துள்ளது. 

இதன் முடிவுகள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

அதே ஆண்டில் 5,020 பிஎச்டி பட்டங்களை வழங்கி கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.

நிதி அயோக்கின் பள்ளி கல்வி தர குறியீட்டில் - கேரளா முதலிடம்!

நாடு முழுவதும் பள்ளிகளின் கல்வி தரம் மாநிலங்களில் கணிசமாக வேறுபடுகிறது என்பதை மத்திய அரசின் உயர்மட்ட சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் ஒரு விரிவான மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளது.

பள்ளி கல்வி தர அட்டவணையில் 20 பெரும் மாநிலங்களில், கேரளா 76.6 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது, உத்தரபிரதேசம் 36.4 சதவீதத்துடன் மிக மோசமானதாகவும் கடைசி இடத்திலும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் "ராட்சசி" படத்திற்கு பாராட்டு !

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் சமூக அக்கறை கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. இருப்பினும் இப்படங்களுக்கு மக்களிடையே அங்கீகாரம் கிடைத்தாலும், அரசாங்கம் சிறந்த படைப்புகளுக்கு முறையான அங்கீகாரம் தருவது கிடையாது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள், வடசென்னை படங்களுக்கு தேசிய விருது மறுக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் ராட்சசி, சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.

இருப்பினும் இது போன்ற படங்களுக்கு வெளிநாடுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. நல்ல அங்கீகாரமும் கிடைக்கிறது. 

ராட்சசி:

உத்தரகண்ட் மாநிலத்தில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக அறிவிப்பு!

உத்தரகண்ட் அரசு 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை கட்டாய பாடமாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.

மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே கூறுகையில் "சமஸ்கிருதம் நமது பண்டைய மற்றும் கடவுளின் மொழி. இந்த மொழி நம் கலாச்சாரத்தை அளவிடமுடியாத அளவிற்கு வளப்படுத்தியுள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். எங்கள் தலைமுறை மொழியை அறிந்திருக்க வேண்டும். எனவே சமஸ்கிருதம் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது " என்றார்.

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு: இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு!

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு, இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றி மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது.

தற்போது வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கான மதிப்பெண் முறையில் தமிழக அரசு மீண்டும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த முறைபடி மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2022 ஆண்டு வரை மாணவ தேர்ச்சி நிறுத்தி வைக்கப்ப‌டாது ‍- செங்கோட்டையன்!!!

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி கமல் கருத்து!!!

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - ஓர் வழிகாட்டி!!!

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்குள் நுழையும் 82 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இந்த உதவித்தொகையை எவ்வாறு பெறுவது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

யார் விண்ணப்பிக்க வேண்டும்?

ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி!

இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு வரும் மே 31, 2020 ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், தற்போது அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ஆறு மாத காலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி காலங்களில் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Subscribe to கல்வி