Skip to main content

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் மம்தா நேரில் சந்திப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திகார் சிறையில் சிதம்பரம் ‍‍- காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பு!

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் சிபிஐ காவலில் உள்ள முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல் சந்தித்து பேசினர்.

அவர்களுடன் சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார்.

புதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா!!!

நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட வாய்ப்புள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சரண் மனு தள்ளுபடி!!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
 
சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை எனவும், தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் "என்னை நேசிக்கிறார்" - அர்னால்ட் கேலி!!!

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றபோதும் டிரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தமிழிசை புதிய வேண்டுகோள்!!!

முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் 
8 ஆம் தேதி தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, தெலுங்கானாவில் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்த வழக்கில், 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றதிற்கு எதிராக சிதம்பரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக 73 வயதான காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முதல்வரின் அடுத்த வெளிநாட்டு பயணம் - இஸ்ரேல்!!!

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

தனது 14 நாள் பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், தனது அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்துள்ளார்.

தனது அடுத்த பயணம் இஸ்ரேலுக்கு எனவும், அந்த நாட்டில் பின்பற்றப்படும் திறமையான நீர் மேலாண்மை நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே இந்த பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் திரும்பினார் முதல்வர்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

முதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். 

Subscribe to அரசியல்