Skip to main content

வித்யா பாலன் மாறுபட்ட தோற்றத்தில் சகுந்தலா தேவி பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வித்யா பாலனின் வரவிருக்கும் படமான சகுந்தலா தேவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

படத்தின் டீஸரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில், வித்யா பாலன் குறுகிய தலைமுடி மற்றும் சிவப்பு சேலையில் தோற்றமளிக்கிறார்.

அனு மேனன் இயக்கும் "சகுந்தலா தேவி" திரைப்படம், இந்தியாவின் பெண் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் வரும் 2020 கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.

சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை!

கடந்த ஆண்டு மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக ஸ்ரீதேவியின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.

 

sridevi wax statue

 

இந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்று மேடம் துசாட்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரை ஆந்திராவில் திறப்பு!

கியூப் சினிமா தனது முதல் EPIQ திரையை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையில் அறிமுகப்படுத்தியது. 

100 அடி அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட இந்த திரையை, தெலுங்கு நடிகர் ராம் சரண் அறிமுகப்படுத்தினார், இது தெற்காசியாவில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

திறக்கப்பட்டவுடன் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த சாஹோ திரைப்படம் முதலில் திரையிடப்பட்டது.

 

EPIQ

 

“கண்கலங்கிய ‘டைட்டானிக்’ நாயகி, அஞ்சலியின் ‘ரோசாப்பூ’, வாவ்.. வருண் தவான்”

வளர்ந்து வரும் இந்தி நடிகர்களில் ஒருவர் வருண் தவான். அடுத்த சூப்பர் ஸ்டார் பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் வருண்  சென்றவாரம் தனது சிக்ஸ் பேக் படத்தை ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். அப்புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. தற்போது ஹாங்காங்கில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகு சிலைகள் அருங்காட்சியகத்தில் இவரது மெழுகு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ஷாருக் கான், அனில் கப்பூர், சல்மான் கான், மாதுரி திக்‌ஷித், ஹ்ரிதிக் ரோஷன், கத்ரீனா கைஃப், கரீனா கப்பூர், ஐஸ்வர்யா ராய் என்ற வரிசையில் பாலிவுட் நடிகர்களில் மிக இளம் வயதில் இந்தப் பெருமையைப் பெற்றவர் இவரே. 

‘பத்மாவதி - அலாவுதீன் கில்ஜி கனவுக் காட்சிகள் இல்லை..!’ - சென்சார் டு சரண்டர் ‘பத்மாவத்’ பயணம்

படப்பிடிப்பு தளம் எரிப்பு, நடிகர்களுக்கு கொலை மிரட்டல், இயக்குநர் மீது தாக்குதல்... இப்படி பல பிரச்னைகளை கடந்து, வரும் 25ம் தேதி வெளியாகிறது ‘பத்மாவத்’ திரைப்படம். தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரன்வீர் சிங் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க காரணம் என்ன?

''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ..."

பானுமதியாக நடிக்கும் பாகமதி

ராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்...

அக்‌ஷய் குமார் ஜோடியாகும் ப்ரணிதி சோப்ரா

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும்  திரைப்படம்  'கேசரி'. 1897-ம் ஆண்டு சீக்கியர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த சரகார்ஹி யுத்தத்தை அடிப்படையாகக்கொண்ட இந்தப் படத்தை அனுராக் சிங் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரணிதி சோப்ரா கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்ட கதைகளில் நடித்துவரும் அக்‌ஷய் குமாரின் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியுள்ளது.     

"ஒரு நாய்க்குட்டிக்கு இவ்ளோ அக்கப்போறா?" - 'அய்யாரி' படம் எப்படி?

இந்திய ராணுவத்தில் நடக்கும் ஊழல்களைக் கண்டிக்கிறார்களா, பங்கெடுக்கிறார்களா எனப் புரிந்துகொள்ள முடியாத இரண்டு நாயகர்களைப் பற்றிய த்ரில்லர் கதையாக இருந்திருக்க வேண்டிய படம்தான் 'அய்யாரி'

காதலா - நட்பா என்ற போரில், 'நட்புதான் எங்கள் சொத்து' என்று கெத்தாகக் கைக்கோத்து நடக்கும் இரு பால்யகால நண்பர்களின் காமெடி- எமோஷனல் ஸ்டோரி 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.

சோனுவும் (கார்த்திக் ஆர்யான்), டிட்டுவும் (சன்னி சிங்) சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். டிட்டுவுக்கு ஒவ்வொரு முறையும் பிரேக்அப் ஏற்படுவதற்கு சோனு காரணமாக இருப்பதோடு, டிட்டுவைக் கல்யாணம் செய்துகொள்வதிலிருந்து தடுக்கவும் செய்கிறான். இந்நிலையில், டிட்டுவுக்கு ஸ்வீட்டியுடன் (நுஷ்ராத் பருச்சா) நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்களின் காதல் துளிர்விடும் சமயத்தில் சோனுவிற்கு ஸ்வீட்டி வில்லியாக மாறுகிறாள். இறுதியில், நட்பா, காதலா என்ற பாசப் போரட்டத்தில் யார் வெல்கிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.

"அலியாவின் 'சூப்பர் ஹீரோ' கதை, 'விண்வெளி வீரன்' ஷாரூக் கான், சில்வர்ஸ்டரின் கலாய், ப்ரிதிவிராஜின் ஸ்பெஷல்..."

 

Subscribe to பாலிவுட் செய்திகள்