Skip to main content

தகவல் திருட்டு விவகாரத்தால் பங்குகள் கடும் வீழ்ச்சி : வெளியேறும் வாடிக்கையாளர்களால் திணறும் ஃபேஸ்புக்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் அம்பலமானது முதல் அதன் பங்குகள் 8.7% சரிந்துள்ளன. வீழ்ச்சியடைந்த இதன் சந்தை மதிப்பு 45 பில்லியன் டாலர்கள் என்கிறது புள்ளி விவரம். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை போட்டி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டுள்ளன. சரிவை மீட்டெடுக்க சீர்திருத்த நடவடிக்கைகளை ஃபேஸ்புக் மேற்கொண்டுள்ளது. அதில் முதன்மையாக சர்ச்சைக்குரிய கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஃபேஸ்புக் உடனடியாக ரத்து செய்துள்ளது.

பட்ஜெட் எதிரொலி... எகிறியது ஷேர் மார்க்கெட்... 482 புள்ளிகள் உயர்வு!

மும்பை: பட்ஜெட் 2017 சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நிமிடமே பங்கு வர்த்தகம் சாதகமான நிலைக்கு மாறியுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி சென்செக்ஸில் 482 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்து கைமாறியது.

 

 

இந்திய பங்குச் சந்தைகள் 3-வது நாளாக தொடர் சரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டிருந்தன

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பட்ஜெட் காரணமல்ல: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசின் பட்ஜெட் காரணம் அல்ல உலகளாவிய காரணிகள்தான் இதற்குக் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் உயர்வு..!

பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், நாடு முழுவதும் வீட்டுக்கடனுக்கான வட்டியும் உயரும் நிலை உருவாகியுள்ளது. அதனால் மாதாந்திர தவணை தொகையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா: ஜிடிபி 7.2% ஆக உயர்வு!

கடந்த காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) 7.2% ஆக அதிகரித்திருப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில், சீனாவை இந்தியா முந்தியுள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தை நிலவரம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் கை கொடுக்கும், சில நேரங்களில் காலையும் வாரிவிடும். மேல் கீழ் என்று மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த சில நாட்களில் சர்வேத அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தை, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. அமெரிக்க பங்குச் சந்தையோ கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது.

புதிய உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. நிப்டி 10,741 புள்ளிகளுடன் முடிந்தது..!

மும்பை: இந்திய பங்கு சந்தை நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் திங்கட்கிழமையான இன்று புதிய உச்சத்தினை எட்டியுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை முடிவுகள் சென்ற வாரம் நேர்மறையாக வந்ததே ஆகும். 

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!

அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. எனினும், நண்பகல் நிலவரப்படி, சென்செக்ஸ் 33,886 புள்ளிகள் வரை உயர்ந்தது. 

 

இன்னும் 10 வருடம் தான்.. பங்குச்சந்தையில் இருக்கும் 25% நிறுவனங்கள் காணாமல் போய்விடும்..!

இன்னும் 10 வருடம் தான்.. பங்குச்சந்தையில் இருக்கும் 25% நிறுவனங்கள் காணாமல் போய்விடும்..!

இந்திய சந்தையில் தற்போது ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய சந்தைக்கு இயல்பான ஒன்றுதான், ஆகவே இதுகுறித்து முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம்.

 

Subscribe to இந்திய பங்குச்சந்தை