Skip to main content

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரி குறைப்பு அறிவிப்பு: சிறப்பம்சங்கள்

வளர்ச்சி மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்காக பெருநிறுவன வரி குறைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான பிற நிதி நிவாரண நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

உள்நாட்டு நிறுவனங்கள் எந்தவொரு சலுகைகள் / விலக்குகளையும் பெறாததால் பெருநிறுவன வரி விகிதம் 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது; முந்தைய விகிதம் 30 சதவீதம் ஆகும்.

அத்தகைய நிறுவனங்களுக்கான பயனுள்ள வரி விகிதம் இப்போது செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட 25.17 சதவீதமாக உள்ளது; முன்னதாக இது 34.94 சதவீதமாக இருந்தது.

இரண்டு தவணையாக கடன் முகாம்கள் நடத்தப்படும் - நிதி அமைச்சர்!

தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும் என்பதால் கடன் முகாம்கள் நடத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலையை சரிசெய்ய மத்திய அரசு புதிய திட்டம்!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது துறைகளுக்கு புதிய கார்களை வாங்குவதற்கான தடையை நீக்கியதால் வாகனத் துறை ஒரு புதிய ஊக்கத்தை பெற உள்ளது.

அரசு துறைகளால் வாகனங்கள் வாங்குவதற்கான தடையை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ தகவல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.

மேலும், இந்த உத்தரவு அமைச்சரவை செயலாளர், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நிதி ஆலோசகர்கள், பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் துணைத் தலைவர் என்ஐடிஐ ஆயோக் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு !!!

ஜனவரி 2020 ஆண்டு முதல் தொழில் துவங்கும் புதிய வணிகர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் தேவை என சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் தலைவரான அமைச்சர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: 

புதிய வியாபாரிகளுக்கு ஆதார் அங்கீகாரம் என்பது தற்போது வரை அவரவர் விருப்பமாக உள்ளது, இனி வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இது கட்டாயமாக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், போலி விலைப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டு பல பொய் கணக்குகள் ஏமாற்ற பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி சர்வதேச நாணய நிதியம் கூறுவது என்ன?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட ‘மிகவும் பலவீனமாக உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட "மிகவும் பலவீனமாக உள்ளது" என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இதனால், நாட்டில் பெருநிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது எனவும்.

சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனங்களுக்கு இதுவே காரணம் என்றும் கூறியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலைக்கு இதுதான் காரணம்‍ - ‍நிர்மலா சீதாராமன் விளக்கம்!!!

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மந்தநிலைக்கு ஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் தான் காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

விழா கால சலுகையாக எஸ்பிஐ கடன் விகிதங்கள் 10 புள்ளிகள் குறைப்பு!

பொதுத்துறை கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி இன்று செப்டம்பர் 9 ஆம் தேதி கடன் விகிதங்களை 10 புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய விகிதங்கள் நாளை செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மூன்றாவது வீதக் குறைப்பை அறிவிப்பதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

5.65 கோடி ரூபாய்க்கான‌ வருமான வரி அறிக்கைகள் தாக்கல்!!!

நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2019-20 (2018-19 நிதியாண்டு) க்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

இந்த காலக்கெடுவிற்குள் வருமானத்தை சமர்ப்பிக்காத மதிப்பீட்டாளர், தாமதமாக வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார். 

இருப்பினும், தாமதமாக வருமான வரி செலுத்தினால் (வருமான வரி வருமானம்) சில அபராத கட்டணங்கள் செலுத்தவேண்டும்.

 

வாரா கடன்களை மீட்டெடுக்க வங்கி இணைப்பு உதவாது: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வங்கிகளை ஒன்றிணைப்பதில், வாரா கடன்களை மீட்டெடுக்க முடியாது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) உயர் அதிகாரி தெரிவித்தார்.

10 பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பதை எதிர்த்து, AIBEA இன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி சீர்திருத்தங்கள் என்ற பெயரில், பெருநிறுவனங்களுக்கு உதவ வங்கிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார்.

வங்கிகளின் மெகா இணைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

டெல்லியில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

வங்கிகள் இணைக்கப்படுவதால் 27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். 

7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

பஞ்சாப் தேசிய வங்கி, ஒரியன்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைட்டட் வங்கி ஆகிய 4 வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Subscribe to இந்திய பொருளாதாரம்