Skip to main content

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு: அக்டோபர் 3 வரை சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு!!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் மம்தா நேரில் சந்திப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா!!!

நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும், பொது மக்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரதமர் மோடிக்கு மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

hbd narendra modi

உள்துறை அமைச்சர் அமித் ஷா:

69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். 

பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட வாய்ப்புள்ளது.

தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தமிழிசை புதிய வேண்டுகோள்!!!

முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் 
8 ஆம் தேதி தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, தெலுங்கானாவில் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்த வழக்கில், 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றதிற்கு எதிராக சிதம்பரம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக 73 வயதான காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- ஆரம்ப விலை ரூ. 200!!!

பிரதமர் மோடிக்கு வந்த 2772 பரிசுப் பொருட்கள் அனைத்தும், வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தில் குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அலுவல் ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

கங்கை நதி தூய்மை பணி!!!

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பி.கே.சின்ஹா ​​நியமனம்!!!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக முன்னாள் அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா ​​நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

​​கடந்த மாதம் சின்ஹா அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு கடமை (Officer on Special Duty) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் அலுவலகத்தில் தற்போது சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வரும் பி கே சின்ஹாவை பிரதமரின் முதன்மை ஆலோசகராக செப்டம்பர் 11, 2019 ஆம் தேதி முதல் பணி நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு (The Appointments Committee of the Cabinet ) ஒப்புதல் அளித்துள்ளது.

PK Sinha appointed principal advisor to PM Modi

Subscribe to இந்திய அரசியல்