Skip to main content

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உட்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

விரைவில் ஓய்வு பெறவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பின்னர் அந்த பதவியில் யாரை நியமிக்கலாம்? என்று பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-11-2019 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

அதற்கிடையில், தனக்கு அடுத்தபடியாக இந்த பதவியை யார் ஏற்கலாம்? என்று தலைமை நீதிபதி ஒருவரை சுட்டிக்காட்டுவது இயல்பு.

அவ்வகையில், தனக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் எஸ்.ஏ.பாப்டே-வின் பெயரை பரிந்துரைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளார்.

நெருங்கும் தேர்தல்: ஹரியானாவில் மோடி, ராகுல் அனல் பறக்கும் பிரச்சாரம்!

அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து இந்த இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய இருப்பதால் இன்றும் நாளையும் இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெறவுள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் அரியானாவில் இரண்டு நகரங்களிலும், மகாராஷ்டிரத்தில் ஒரு இடத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இறுதி கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவலால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

நவம்பர் 30-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர், சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

5 நீதிபதிகளும் இன்று தங்கள் அறைகளில் இருப்பார்கள்; வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

அயோத்தி வழக்கு: இரு தரப்பு வாதம் நிறைவு!

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக நடைபெற்ற அயோத்தி வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. 

மிகவும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், "வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று 40-வது நாளாக நடைபெற்றது.

ஜம்முவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் ‍- உளவுத்துறை எச்சரிக்கை!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது.

சிறப்பு அந்தஸ்து பறிபோனதால் காஷ்மீர் அரசியல் தலைவர்களும், பிரிவினைவாதிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கக் கூடும் என்பதால் கடந்த 2 மாதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு இருந்தன.

முதலீட்டாளர்களுக்கு "இந்தியா" ஒரு சிறந்த இடம் - நிர்மலா சீதாராமன்!

தொழில் செய்ய இந்தியாவை விட முதலீட்டாளர்கள் ஒரு "சிறந்த இடத்தை" காண முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியா ஒரு முக்கிய நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்குத் தேவையானதை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருவதாக அவர் தெரிவித்தார். 

ஜனநாயகத்தை நேசிக்கும் மற்றும் முதலாளித்துவ மரியாதைக்குரிய சூழலைக் கொண்ட இந்தியாவை விட, உலகில் "சிறந்த இடத்தை" முதலீட்டாளர்கள் தொழில் செய்ய காண முடியாது என்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். 

பிசிசிஐ புதிய தலைவர் கங்குலிக்கு - அமுல் நிறுவனம் வெளியிட்ட டூடுல்!

அக்டோபர் 23 ஆம் தேதி பிசிசிஐ தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் இந்திய கிரிக்கெட்டின் கவுன்சிலின் இந்த உயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் கங்குலி என்பதால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி புதிய பிசிசிஐ தலைவரானதை தொடர்ந்து பலர் இந்த நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், கங்குலிக்கு வாழ்த்து தெரிவிக்க அமுல் இந்தியா ஒரு டூடுலை அர்ப்பணித்துள்ளது.

சிதம்பரத்தின் ஜாமீன் மனு: மீண்டும் ஒத்திவைப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிப்பதை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரது நீதிமன்ற காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

பா.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கதுறை அதிரடி நடவடிக்கை!!!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Subscribe to இந்தியா