Skip to main content

துடியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: கமல் நேரில் ஆறுதல்!

kamal

கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29 ஆம் தேதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தேர்தல் முக்கியம் அல்ல, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நம்மால் முடிந்த ஆறுதலை வழங்குவதே முக்கியம் என என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, நான் இங்கு வந்திருப்பதே இந்த விஷயத்தைக் குறித்து நிறைய பேர் பேச வேண்டும் என்பதற்காகத்தான் என தெரிவித்துள்ளார்.

coimbatore rape case

தனது வீட்டுக்கு 20 அடி தொலைவிலேயே ஒரு சிறுமி பாதுகாப்பாக விளையாட முடியாத சூழல் நிலவும் என்றால், இது கண்டிப்பாக தமிழகத்திற்கே அவமானம்தான். இதை களைய வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

சிறுமியின் பெற்றோர் தங்களுக்குரிய நீதி தாமதமாவதாக அவர்கள் கருதுகிறாரகள். இது கண்டிப்பாக தேர்தல் சமயத்திற்கான சந்திப்பு அல்ல. தேர்தல் இல்லாவிட்டாலும் இவர்களுக்காக நான் வந்திருப்பேன். பிற அனைத்து விஷயங்களை விடவும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த சமயத்தில் பாதிப்புக்குள்ளான பெற்றோரின் மன ஆறுதலே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.

Coimbatore Girl Child rape scam: Kamalhassan visits victims home.

coimbatore
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.