Skip to main content

துப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது?

image

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பிரச்னைகள். எந்தப் புதிய படமும் வெளியாகாவில்லை. இந்த நேரத்தில் டாம் ரைடர் படம் வெளியாகியிருப்பது அதற்கு கிடைத்துள்ள பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். உலகப் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரம் ஒன்றை முதன்மையாக கொண்டு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக வெளிவந்திருக்கும் Tomb Raider படம் எப்படி?

இளம் வயதிலேயே லாரா க்ராஃப்ட்டை (அலிசியா விகேண்டர்) விட்டுவிட்டு ஓர் உண்மையை தேடி, சாகசப் பயணம் ஒன்றுக்கு செல்கிறார் லாராவின் தந்தை (டாமினிக் வெஸ்ட்). சென்றவர் ஏழு வருடமாகியும் திரும்பாததால், இறந்துவிட்டதாகவே கருதப்படுகிறார். விரக்தியில் தன் கோடிக்கணக்கான சொத்துக்களையும், தன் தந்தை காட்டிகாத்த நிறுவனத்தையும் ஒரு பெண் உதவியாளரிடம் விட்டுவிட்டு தனித்து வாழ்கிறார் லாரா. அப்போது ஒரு சந்தர்ப்பத்தில் மனம் மாறி திரும்பும் வேலையில், தன் தந்தை போயிருப்பது வெறும் சாகசப் பயணம் மட்டுமல்ல, ஹிமிக்கோ என்ற மரணத் தேவதையின் கல்லறையை தேடி என்பது புரிகிறது. இயல்பிலேயே தற்காப்பு கலைகள் கற்றவளாக, சாகசங்களின் மேல் அலாதி பிரியம் கொண்டவளாக இருக்கும் அவள், தன் தந்தை விட்டு சென்ற தடயங்களை பின்பற்றி அவரை தேடிச் செல்ல பயணப்படுகிறாள். அந்தப் பயணத்தில் அவள் தெரிந்து கொண்ட ரகசியங்கள் என்ன? ஹிமிக்கோ என்ற மரணத் தேவதை யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு சாகசங்கள் பல கலந்து பதில் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் டாம் ரைடர் கேம் குறித்தும் அதில் வரும் லாரா க்ராஃப்ட் குறித்தும் அறிமுகம் கொடுக்க தேவையில்லை. இப்போதும் இந்த கேமில் புது புது வெர்ஷன்கள் வருகின்றன என்றாலும் 2001-07 வரை உலகெங்கும் பேசப்பட்ட கேம் இதுவாகத்தான் இருக்கும். சாகசக்காரியாக லாரா க்ராஃப்ட் தோன்றி செய்யும் அதிரடிகள் அப்படியே வெள்ளித்திரையிலும் விரிந்தன. லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்செலினா ஜோலி லாரவாக நடிக்க 2001ம் ஆண்டு Lara Croft: Tomb Raider என்ற பெயரில் படமாக வெளியானது. ஏஞ்செலினா ஜோலியின் நடிப்பை பாராட்டினாலும், படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் துணிந்து இரண்டாம் பாகம் 2003-ம் ஆண்டு எடுக்கப்பட அதற்கும் அதே ரிசல்ட். இந்த வரலாற்றை மாற்றி எழுத ஆஸ்கர் நாயகி அலிசியா விகேண்டரை வைத்து Tomb Raider படத்தொடரை ரீ-பூட் செய்திருக்கிறார்கள். லாரா க்ராஃப்ட் என்றதும் இரண்டு கைகளில் துப்பாக்கியுடன் இருக்கும் ஏஞ்சலினா ஜோலிதான் நினைவுக்கு வருவார். சிலருக்கு பில்லா படத்தில் நயன்தாரா ஹை ஹீல்ஸில் காரின் மேல் நடந்து வருவது கூட நினைவுக்கு வரலாம். அலிசியா ஏஞ்சலினா ஜோலியின் கதாபாத்திரத்தை எந்தளவு பூர்த்தி செய்கிறார் என்பதுதான் கேள்விக்குறி.  அலிசியா இரண்டு துப்பாக்கிகளுடன் போஸ் தர, இறுதி வரை காத்திருக்க வேண்டும்

படம் முழுக்க லாராவை பெரிய புத்திசாலி என்று புகழ்கிறார்கள். ஆனால், அதை நிரூபிக்கும் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு. இறுதியில் ஒரு ட்விஸ்டை வைத்து இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கிறார்கள். அந்த ட்விஸ்ட் கூட லாராவின் தந்தை கொஞ்சம் யூகித்திருந்தால் முன்னமே கண்டுபிடித்திருக்கலாம். அதை லாராவிடமும் சொல்லியிருக்கலாம். லாரா க்ராஃப்ட் படங்களில் வந்த  இரண்டு துப்பாக்கிசாகசங்கள் இதில் இல்லை. டாம் ரைடர் கேம் பாணியில் வில் அம்பு பயன்படுத்தியிருக்கிறார்கள். அம்பு நூல் இழைல மிஸ் ஆயிடுச்சு. image

Tamil