Skip to main content

துணை முதல்வரின் இடைத்தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்!

#Bypolls

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும், சூலூர் எம்எல்ஏ வின் திடீர் மரணம் காரணமாகவும் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

election

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு 7 ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவித்தது.

30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது.

மே 2 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அதன் தொடர்பான பணிகள் யாவும் நேற்றுடன் நிறைவடைந்தது.

bypolls

மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த நான்கு தொகுதிகளில் வாக்குசேகரிக்க அதிமுக சார்பில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான விவரங்களை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

O.Paneerselvam Election Campaign for byelection in tamilnadu.

ops

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.