Skip to main content

"தற்போதைய பேட்டிங் வரிசையை விட, இந்தியாவில் இருந்து சிறந்த பேட்டிங் வரிசையை நான் பார்த்திருக்கிறேன்" - இயன் சாப்பல்.

"தற்போதைய பேட்டிங் வரிசையை விட, இந்தியாவில் இருந்து சிறந்த பேட்டிங் வரிசையை நான் பார்த்திருக்கிறேன்" - இயன் சாப்பல்.

வரலாறு படைத்த இந்த இந்திய அணியின் பேட்டிங்தான் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஆடிய சிறந்த இந்திய பேட்டிங் வரிசை என்று கூற முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார். 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் இயன் சாப்பல் கூறியதாவது:

தற்போதைய இந்திய அணி சிறந்த வேகப்பந்து கூட்டணியாகும், இந்தியாவிலிருந்து வந்த அணிகளில் இந்தப் பந்து வீச்சுக் கூட்டணி சிறந்தது, சிறந்த பீல்டிங் அணியாகவும் உள்ளது.

ஆனால் இது சிறந்த பேட்டிங் அணி என்று கூற முடியாது, இந்த அணியை விட சிறந்த பேட்டிங் வரிசையை நான் இதற்கு முன் கண்டுள்ளேன்.

ian chappel

இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பவுலிங் வரிசையை முறியடித்து விட்டனர். நிறைய ஸ்விங் செய்கின்றனர். ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஸ்விங் கை கூடவில்லை.

பந்தின் தையலை மிக அருமையாக நிலைப்படுத்துகின்றனர். இந்த இந்திய வீச்சாளர்கள், பந்தை முழு லெந்தில் வீசுகின்றனர், இதனால்தான் ஆஸ்திரேலியர்களை விட அதிக ஸ்விங் அவர்களால் செய்ய முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு இயன் சாப்பல் கூறினார்.

I have seen better batting combinations from India than this team, says Ian Chappell

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.