Skip to main content

தபால் வாக்கு முறையில் முறைகேடா? ‍தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தபால் வாக்கு

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வரும் மே 17ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்களின் தபால் வாக்களிக்கும் விண்ணப்ப படிவங்கள், சாதாரண காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு

காவல்துறையைச் சேர்ந்த 90 ஆயிரம் பேர் முழுமையாக தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

"தபால் வாக்கு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாக்களிக்கத் தவறிய அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்களை முறையாக வழங்கி, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான சாந்தகுமார் மனு தாக்கல் செய்தார்.

தபால் வாக்கு

இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் மே 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க விநியோகிக்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (மே 17) ஒத்திவைத்தனர்.

Details of postal votes should be submitted on May 17: Chennai HighCourt orders EC.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.