Skip to main content

தொடரும் "போயிங்" ரக விமான விபத்துகள் ‍- இந்தியாவில் புதிய கட்டுபாடுகள்!

எத்தியோப்பியா விமான விபத்து

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலியாக, இனி 1000 மணிநேர அனுபவம் கொண்ட பைலட் மட்டுமே போயிங் வகை விமானங்களை இயக்க வேண்டும் என இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் "போயிங் 737 மேக்ஸ்" ரக விமானம் விபத்துக்குள்ளான ஒரு நாளில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை (DGCA) நாட்டில் செயல்படும் விபத்துக்குள்ளான "போயிங் 737 மேக்ஸ்" ரகவகை விமானங்களுக்கு கூடுதல் பராமரிப்பு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான "போயிங் 737 மேக்ஸ்-8" விமானம், நேற்று (March 11) காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 29-ல் இதேபோன்ற சூழ்நிலைகளில் இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் விழுந்து 189 பேரை பலிகொண்டதற்கு பிறகு, போயிங் 737 MAX 8 விமானம் தொடர்பான இரண்டாவது விபத்து இது ஆகும். 

இந்த விபத்தைத் தொடர்ந்து "போயிங் 737 மேக்ஸ்-8" ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, "போயிங் 737 மேக்ஸ்-8" ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது.

​    ​ethiopia airlines crash​    ​

அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், "போயிங் 737 மேக்ஸ்-8" ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது, "1,000 மணி நேரம்" அனுபவம் வேண்டும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. 

இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் இந்த போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன.

"போயிங் 737 மேக்ஸ்-8" ரக விமானம் புதிய மாடலாகும், இது 1967 முதல் இயங்கி வருகிறது என்றும் 2017 வரை 5000 விமானங்களுக்கு ஆர்டர் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவரை 350 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

"Only Pilots With 1,000 Hours": New Rules In India For Boeing 737 Max

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து!
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.