Skip to main content

தொடரும் சிலை கடத்தல் அவலம் - திருவாரூரில் அதிகாரிகள் ஆய்வு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலின் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி திரு பொன் மாணிக்கவேல் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 திற்கும் மேற்பட்டவர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

திருக்கோட்டரம் கோவில் குருக்களான திரு சோமசுந்தரம் குருக்கள், பாதுகாப்பு மையத்தின் வெளியே ஆய்வின் போது அமர்ந்திருந்தார். கோவிலில் உள்ள வெண்கலச் சிலைகள் ஒவ்வொன்றாக ஆய்விற்காக எடுத்து வரப்பட்ட போது, அவர் மிகவும் ஆச்சரியத்துடன் அதனைப் பார்த்தார்.

வில்லேந்திவேலன் சிலையில் முருகப்பெருமான் ஒரு வில் வைத்திருப்பார். மேலும் சில கோவில்களில் மட்டுமே இத்தகைய சித்திரங்கள் காணப்படுகின்றன என்று குருக்கள் கூறினார்.

அந்த சிலை கோவிலுக்குச் சொந்தமானதா என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் குருக்களிடம் கேள்வி எழுப்பினார்.  

சிதம்பரம் கோவிலின் கருவறையில் உள்ளதை விட பெரிய நடராஜ சிலை அந்தக் கோவிலில் உள்ளதாகத் திரு சோமசுந்தர குருக்கள் பெருமையாகக் கூறினார். திருவிழாவின் போது விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு வருவதாகவும், கோவிலில் அவற்றை வைக்க பாதுகாப்பற்றதாக இருந்ததால், சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு திருப்ப அனுப்பிவிடுவதாகவும் அவர் கூறினார்.

சிலைகள் கோவிலுக்கு சொந்தமானது தானா என்று அடையாளம் காண உள்ளூர் மக்களையும், குறிப்பாக முன்னோர்களையும் அழைத்துவரும் படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரை பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டார்,

சிலைக் கடத்தல் சோதனையின் போது பல இடங்களில் அவ்வூரில் உள்ள பெரியவர்கள் தங்களது ஊரின் கோவில் சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

கல்பாக்கத்தில் இருந்து இந்திரா காந்தி அணுசக்தி மைய விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், சிலைகளை குருக்களாலும், கோவிலில் வேலை செய்பவர்களாலும் கூட அடையாளம் காண முடியவில்லை. அணுசக்தி மைய அதிகாரிகள், சுத்திகரிக்கப்பட்ட இடத்தில் எக்ஸ்-ரே புளோரஸ்சென்ஸ் பகுப்பான் கொண்டு உலோகக் கலவையை சரிபார்க்க விஞ்ஞானிகள் தயாராகினர்.

சிலைகளில் காப்பர் முக்கிய அங்கமாகும். இதில் இரும்பு, துத்தநாகம்,ஈயம், தகரம் மற்றும் பாஸ்பரஸ் தடயங்களைத் தொடர்ந்து, பித்தளையும் அதிகமாக இணைந்திருக்கின்றது. இதிலிருந்து, விக்கிரகங்கள் வேறுபட்ட காலத்தைச் சேர்ந்ததாக விஞ்ஞானிகளில் ஒருவர் குறிப்பிட்டார்.

திரு. பொன் மாணிக்கவேல் அளித்த புகாரின் பேரில், நீதிபதிகளான ஆர்.மஹாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவேலு ஆகியோரை உள்ளடக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த அனைத்து ஆய்வுகளும் நடத்தப்பட்டது.

The Idol Wing-CID and the Archaeological Survey of India were checked the antiquity of idols at

the Thiyagarajaswamy temple in Tiruvarur.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.