Skip to main content

தொடர் இறக்கத்தில் இருந்து ஏற்றம் அடைந்த பங்குச்சந்தை !!!

தொடர் இறக்கத்தில் இருந்து ஏற்றம் அடைந்த நேற்றைய பங்குச்சந்தை !!!

தொடர் இறக்கத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள் ரிசர்வ் வங்கியின் முடிவால் நேற்று அக்டோபர் 29 ஆம் தேதி ஏற்றமடைந்து காணப்பட்டது.

40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை சந்தை மூலமாக ரிசர்வ் வங்கி வாங்க முடிவு செய்துள்ளதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சந்தை ஏற்றமடைந்து காணப்பட்டது.

வாரத்தின் தொடக்க நாளான அக்டோபர் 29 ஆம் தேதி சந்தை ஏற்றத்தில் முடிவுபெற்றது. சென்செக்ஸ் 718.09 புள்ளிகள் உயர்ந்து 34067 புள்ளிகளில் வர்த்தகமானது. நிப்டி 220.85 உயர்ந்து 10200 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமானது. இரண்டு குறியீட்டெண்களுமே 2.2 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மோசமான நிலை, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவடைந்து வந்தன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அரசு கடன் பத்திரங்களைப் பங்குச் சந்தை மூலமாக வாங்குவதாக அறிவித்தது. ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்குகிறது. இதன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு வரவுள்ளதால் சந்தை இறக்கத்திலிருந்து மீண்டும் ஏற்றமடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கிப் பங்குகள் ஏற்றம் கண்டன. ஐசிஐசிஐ வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி போன்றவை 10 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் கண்டன. என்எஸ்இயில் பொதுத் துறை வங்கிக் குறியீடு 7.99 சதவீதம் ஏற்றம் கண்டது.

Sensex raised on monday this week.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.