Skip to main content

தொண்டை புற்றுநோய்: காரணம், அறிகுறி, சிகிச்சை!

தொண்டை புற்றுநோய்

இன்று சர்வதேச உலக புற்றுநோய் தினம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 -ம் நாள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடைமுறைகள், மருத்துவ முறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் தொண்டை புற்று நோய் குறித்தும் அதன் அறிகுறிகளையும் இங்கு பார்க்கலாம்.

தொண்டை புற்று நோய்க்கு காரணமான ஸ்குமஸ் செல் கார்சினோமா என்ற செல்லின் அதீத கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோயாக மாறுகிறது.

இதனால் குரல் வளை, குரல் நரம்புகள், டான்சில்ஸ் மற்றும் உணவுக் குழாய் ஆகியவை பாதிக்கப்படும்.

காரணம் என்ன? 

மற்ற புற்று நோய்களுடன் ஒப்பிடுகையில் தொண்டை புற்றுநோய் ஒப்பீட்டளவில் அசாதாரணமானது.

ஸ்குமஸ் செல் கார்சினோமா உருவாகக் காரணம் புகைப்பழக்கம், ஆல்கஹால் உட்கொள்ளுதல், மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) அதாவது வாய்வழி புணர்ச்சியினாலும் உருவாகிறது. 

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

தொண்டை புற்றுநோயை கண்டறிவது கடினமாக இருக்கலாம்.

இதற்கு உள்ள பொதுவான அறிகுறி என்பது உங்கள் குரலின் தன்மை மாறும், உணவை விழுங்குவதில் தொந்தரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தொடர்ச்சியாக இருமல், தொண்டை வறண்டு போகுதல், காதுவலி மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.

சிகிச்சை முறை 

தொண்டை புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்பது, அறுவை சிகிச்சையில் கட்டிகளை அகற்றுதல், கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலமாக வழங்கலாம்.

சிகிச்சை முறைகள் புற்றுநோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்ற வகையில் வழங்கப்படலாம்.

Throat cancer Reason, symptoms, Treatment.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.