Skip to main content

தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்திற்கு "சிறந்த நகைச்சுவை படம்" விருது!

தனுஷ்

ஆங்கிலத்தில் உருவான "தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்" (The Extraodinary Journey of the Fakir) திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார்.

படத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வஞ்சிக்க முயற்சி செய்கிறார் தனுஷ்.

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீ

இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட்டது.

சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர் தனுஷ். தற்போது ஆங்கிலத்தில் முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிவிட்டார்.

the extraordinary journey of fakir

முன்னதாக கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இப்படம், நார்வே திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது.

அதில் ‘தி ரே ஆஃப் ஷன்ஷைன்’ (The Ray of Sunshine) என்ற முக்கிய விருது கிடைத்துள்ளது. 

Dhanush's The Extraordinary Journey Of The Fakir wins audience award at Barcelona Sant-Jordi International Film Festival

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.