Skip to main content

தங்க இருப்பு பட்டியல்: முதல் 10 நாடுகளில் இடம்பிடித்தது இந்தியா!

World Gold Council

உலக அளவில் மொத்த தங்க இருப்பு அடிப்படையில் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. 

நெதர்லாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்தம் 618.2 டன் தங்க இருப்பு உள்ளது, இது நெதர்லாந்தின் 612.5 டன் தங்க இருப்புக்களை விட சற்று அதிகம்.

தனிப்பட்ட நாடுகளைப் பொறுத்தவரையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் காரணமாக, இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய வெளியீட்டின்படி, அமெரிக்கா 8,133.5 டன்களுடன் முதலிடத்தில் உள்ளது, ஜெர்மனி 3,366.8 டன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 2,451.8 டன் வைத்திருப்பதன் மூலம் மூன்றாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இத்தாலி (2,451.8 டன்), பிரான்ஸ் (2,436.1 டன்), ரஷ்யா (2,219.2 டன்), சீனா (1,936.5 டன்), சுவிட்சர்லாந்து (1,040 டன்) மற்றும் ஜப்பான் (765.2 டன்) இந்தியாவுக்கு முன் 9 வது இடத்தில் உள்ளது.

India among top 10 nations in gold reserves

Tamil