Skip to main content

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியானது ஆவடி!

ஆவடி

தமிழகத்தின் குட்டி மாநகராட்சிகளில் சென்னையை அடுத்துள்ள ஆவடியும் இணைகிறது. சென்னையின் ஒரு அங்கமாக இணைந்திருந்த ஆவடியை இன்று தனி மாநகராட்சியாக்கி சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடி உருவெடுத்துள்ளது.

ஆவடி 2011ம் ஆண்டு தனி சட்டசபைத் தொகுதியானது. அப்போது முதல் இது அதிமுக வசமே இருந்து வருகிறது. முதல் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ரஹீம். தற்போது உறுப்பினராக இருப்பவர் மாஃபா பாண்டியராஜன். இவர் அமைச்சராகவும் இருக்கிறார். அந்த வகையில் ஆவடிக்கு தனிப் பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் பாண்டியராஜன்.

இது ஒரு வகையில் அதிமுகவுக்கும் கூட சாதகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 5வது பெரிய மாநகராட்சி ஆவடிதான். 

Avadi Becomes 15 th Municipal Corporation in Tamilnadu

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.