Skip to main content

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி!

nomination filing last day

இந்தியாவில்  ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 97 தொகுதிகள் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் இடம் பெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மார்ச் 25 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

nomination

2019 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (March 25) நிறைவடைந்தது.

தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி கடந்த 19 ம் தேதி முதல் தொடங்கியது. கட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

nomination

இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (March 26) நிறைவடைகிறது. 

பாஜக தலைவர் தமிழிசை, கனிமொழி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலரும் நேற்றே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 179 பேர் தங்களது வேட்புமனுக்களை அளித்தனர்.

இதில் 29 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திருநங்கை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

tamilisai

அதேபோன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 18 பேர் பெண்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 254 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

filing nomination

அதன் பின்பு, 27 ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட இருக்கின்றன. 

வேட்பாளர்களின் ஆவணங்கள் அப்போது சரி பார்க்கப்படும். தொடர்ந்து 29-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்.

மார்ச் 29 - ஆம் தேதி மாலை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

Nomination filing for second phase loksabha polls conclude today.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.