Skip to main content

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1237 பேர் வேட்புமனு தாக்கல்!

தமிழகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

nomination

இதில் ஆண்கள் 1099 பேரும், பெண்கள் 136 பேரும், திருநங்கைகள் 2 பேரும் அடங்குவார்கள்.

அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதிக்கு 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசி தொகுதிக்கு 11 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதில், 628 பேர் ஆண்கள், 93 பேர் பெண்கள், 2 திருநங்கைகள் அடங்குவார்கள்.

இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகள்! 

இதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 486 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் ஆண்கள் 412 பேரும், பெண்கள் 74 பேரும் அடங்குவார்கள்.

tamilisai

அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதிக்கு 68 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மானா மதுரை தொகுதியில் 9 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இறுதி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

Nomination Filing comes to end in TN, totally 1237 candidates filed nomination for LS election.

nomination filing

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.