Skip to main content

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியீடு!

h raja

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

இதில் அக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளான பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒரு தொகுதியும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

h raja

இந்த சூழலில் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மக்களவை தேர்தலில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர ராஜனும், சிவகங்கையில் எச்.ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என்று உத்தேச பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H.Raja to contest in Sivagangai Constituency.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.