Skip to main content

தமிழகத்தில் மார்ச் 29 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 29 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இறுதி நாளான நேற்று (March 26) வேட்புமனு தாக்கல் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.

loksabha election

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) (March 27) நடைபெறுகிறது.

அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

முறையாக கையெழுத்து போடப்பட்டு ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.

​    ​​ loksabha elections

மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் 29-ந் தேதி (நாளை மறுநாள்) (March 29) மாலை 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் நேற்று (March 26) முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Final List of candidates contesting in Loksabha Election in Tamilnadu will be announced on March 29.

மார்ச் 29 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.