Skip to main content

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் இயக்க அரசாணை வெளியீடு!

தமிழகம்

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்பதற்கான அரசாணை இன்று ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதிவரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து, அரசுக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகம்

இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்பதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளிடப்பட்டது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

NO CLOSING HOURS FOR SHOPS AND INDUSTRIESIN TAMILNADU - GOVERNMENT PASSES GO.

தமிழகம்


 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.