Skip to main content

தமிழகத்தில் கோடை விடுமுறை: ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம்!

ooty mettuplaayam one way

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை உதகை - மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

ooty mettupalayam one way

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும்.

ooty mettupalayam one way

அதேபோல், உதகையில் இருந்து கோவை செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதில் குன்னூரில் இருந்து அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவே அனுமதிக்கப்படும்.

மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் அனைத்து லாரிகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோத்தகிரி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும், எனவே அவை பர்லியாறு வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.

Ooty - Mettupalayam One way came into process ahead of Summer Vacation in TamilNadu. 

mettupalayam ooty one way map

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.