Skip to main content

தமிழகத்தில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் "13 வது தேசிய நெல் திருவிழா"!

paddy festival

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரால், நெல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவானது, 2007ம் ஆண்டு முதல் கிரியேட் அமைப்பு சார்பில், நமது நெல்லைப் பாதுகாப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து, அண்மையில் மறைந்த நெல் ஜெயராமனால், 12 ஆண்டுகளாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக நடத்தப்பட்டு வந்தது.

இந்த ஆண்டிற்கான 13 வது தேசிய நெல் திருவிழாவானது, ஜுன் 8, 9 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ளது. 

paddy festiva

சிறப்பு விருந்தினர்கள்:

1. தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி,

2. நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் பத்மா ரகுநாதன்,

3. நுகர்பொருள் வழங்கல் அமைப்பின் இயக்குநர் மதுமதி,

4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார்,

5. பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன்,

6. இயற்கை வேளாண் அறிஞரும்,

7. இயற்கை மருத்துவருமான கோ. சித்தர்,

8. திருவாரூர் மாவட்ட கலெக்டர் த. ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்க உள்ளனர்.

paddy festival

முக்கிய நிகழ்வுகள்:

1. நெல் திருவிழாவில் பேரணி,

2. பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி,

3. உணவுத் திருவிழா,

4. விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை வழங்கும் நிகழ்வு உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன.

5. மேலும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வரும் இயற்கை விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கவும்,

6. விவசாயிகளின் அனுபவப் பகிர்வு,

7. கலந்துரையாடல்,

8. கலை நிகழ்ச்சிகள்,

9. பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடி குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

10. இந்த விழாவின் போது சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார், நெல் ஜெயராமன் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

nel jayaraman

விழாவில் பங்கேற்க 

தலைவர் கிரியேட்,
உழவர் சந்தை எதிர்புறம், 
திருத்துறைப்பூண்டி அஞ்சல், 
திருவாரூர் மாவட்டம்.

என்ற முகவரிக்கு கடிதம் எழுதி பதிவு செய்யலாம்.

அல்லது பின்வரும் அலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்,

  • 04369 220954
  • 94433 81816
  • 99527 87998
  • 99761 41780
paddy festival

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.