Skip to main content

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் தெரிவிக்க முன்வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.
 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்? என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு (வயது 27), எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

வசதியான குடும்பம், சொகுசு கார், பண்ணை தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே காதல் மன்னனாக வலம் வந்ததாக கூறப்படுகிறது.

அதுபோன்று அவரது நண்பரான சபரிராஜனும் தனது பேச்சுத்திறமையால் ஏராளமான இளம்பெண்களை மயக்கி, திருநாவுக்கரசுவின் சொகுசு காரில் சுற்றுலா மையங்களுக்கு அழைத்து சென்று உள்ளார்.

sexual abuse
வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25)

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அங்குள்ள மறைவான இடத்துக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபடும்போது அதை மறைந்து இருந்து திருநாவுக்கரசு உள்பட மற்ற 3 பேரும் வீடியோ எடுப்பார்கள்.

பின்னர் அந்த வீடியோவை வைத்து அந்த மாணவிகள் மற்றும் இளம்பெண்களை திருநாவுக்கரசு மிரட்டி தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இப்படித்தான் அவர் பல மாணவிகள், இளம்பெண்களை சீரழித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

pollachi sex scam

கடந்த செவ்வாயன்று மார்ச் 12 ஆம் தேதி இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். 

இதனிடையே, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மார்ச் 14 ஆம் தேதி காலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Pollachi sex scam is transferred to CBI.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.