Skip to main content

தமிழகம் மற்றும் புதுவையில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்!

 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்!

தமிழகம் மற்றும் புதுவையில் 10 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று மார்ச் 14 ஆம் தேதி துவங்குகிறது. மொத்தம் 10 லட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இந்தாண்டு பொதுத்தேர்வுகள் இம்மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் வரும் 08-05-2019 அன்று வெளியிடப்படும்.

12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் வரும் 19-04-2019 அன்று வெளியிடப்படும்.

10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 ம் தேதி வரையில் பொதுத்தேர்வு நடக்கிறது.

பொதுத்தேர்வுகள் குறித்த முழுமையான அட்டவணை, தேர்வு தேதி ஆகியவை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ வலைதளமான பின்வரும் இணையதள முகவரியில் 
 பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.dge.tn.gov.in/docs/hsesslc/HSE_SSLCI_II_Exam_Result_211218.pdf 

10 sslc board exam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். 

இதில் தனித்தேர்வர்கள் 38,176 ஆவர்.

மேலும், 4 திருநங்கைகளும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

மொத்தம் 3,731 தேர்வுமையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 302 பள்ளியைச் சேர்ந்த 16,597 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பியடிப்பதைத் தடுக்கவும், ஆள் மாறாட்டம் செய்வதை தடுக்கவும் 5,500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டள்ளது. 

தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு வளாகத்துக்குள் செல்போன், துண்டு சீட்டு உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு விதிமுறைகளை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

exam

தேர்வு அறைக்கு கொண்டு செல்லவேண்டியவை?

  • ஹால் டிக்கெட்
  • பேனாக்கள், பென்சில்கள் மற்றும் தேர்வு எழுத தேவையான பிற பொருட்கள்.

எடுத்துச்செல்ல கூடாதவை?

  • மொபைல், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனம்.
  • பைகள் மற்றும் புத்தகங்கள்.

அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 29, 2019 அன்று வெளியிடப்படும்.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

http://www.dge.tn.gov.in/

SSLC 10 th Board Exam begins from March 14.

10 time table
                               பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.