Skip to main content

தமிழக‌ பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12 தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு!

tnseb

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதால், அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி வெளியிடப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் பள்ளிகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

பொதுவாக வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 sslc board exam

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

10,11 மற்றம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 29-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதனை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

இதற்கான கால அட்டவணையை மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது 

Tamil Nadu School Education Department orders all schools to conclude the Annual Examination by April 12.

exam
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.