Skip to main content

தமிழக மக்களுக்கு குடிநீர் வாரியம் வேண்டுகோள்!

குடிநீர்

இந்த ஆண்டு ஜனவரி துவங்கி மே மாதங்களுக்கு இடையே, 108 மில்லிமீட்டர் மழை பெய்யவேண்டிய நிலையில் 34 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்தது, இது 69% குறைவாகும்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர்

இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது.

  • ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • "வெஸ்டர்ன் டாய்லெட்" பயன்படுத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
  • தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைக்க வேண்டும்.
  • குடிநீர் தவிர்த்து பிற தேவைகளுக்கு உப்பு தண்ணீர் அல்லது நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டுகோள்.
குடிநீர்

குடிநீர் வழங்குவதில் ஏதேனும் சிக்கல் இருக்கும் பட்சத்தில் 9445802145 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுக்கலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Use water sparingly: Tamilnadu Water Supply And Drainage Board

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.