Skip to main content

தமிழக மக்கள் நினைத்தால் மத்தியிலும் ஆட்சியை மாற்ற இயலும் ‍- கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை!

கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஏப்ரல் 12 ஆம் தேதி கிருஷ்ணகிரியில்  நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை!

வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரம், திருப்பூர் மீண்டும் புத்துயிர் பெறும்.

காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசு எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்சி நடத்துவோம் என ராகுல் தெரிவித்தார்.

ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த பின்னர் தான் பணம் வங்கிக்கணக்கில் போடப்படும். ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெறும். மேலும் தமிழகத்தில் தமிழனான ஸ்டாலின் முதல்வராக வேண்டும். 

Congress Presidemt Rahul GandhiElection Campaign at Krishnagiri Tamilnadu.

rahul gandhi and stalin
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.