Skip to main content

தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்!

fishing ban

கடலோர பகுதியில் மீன்பிடி தடைகாலம் நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவு முதல் துவங்கியதால் படகுகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவை படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

fishermen

 

எனவே தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடித்தடைக் காலத்தில் தமிழக அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை உயர்த்தி 12000 ரூபாயாக வழங்கவேண்டும் என்றும், மீன்கள் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போல மோட்டார் பொருந்திய நாட்டு படகுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

FISHING

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மீன்பிடிதடைக்காலம் 45 நாட்களாக கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Annual fishing ban along TN coast comes into effect

FISHERIES

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.