Skip to main content

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு!

rupa gurunath

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களில் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ஆவார்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களில் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை ரூபா குருநாத் பெறுகிறார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழு நேர இயக்குனரான ரூபா குருநாத் சென்னையில் உள்ள கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் உள்ளார்.

டி.ஜெ.சீனிவாசராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி (மாவட்டம்) ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஆர்.எஸ். ராமசாமி செயலாளராகவும், கே.ஏ.சங்கர் இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி செயலாளராகவும் ஜெ.பார்த்தசாரதி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tamil