Skip to main content

"தளபதி 63" விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?

"தளபதி 63"

"தளபதி 63" படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரப் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய்யின் 63 வது திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், அந்த படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு சி.மைக்கேல் என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.மைக்கேல் என்ற பெயரை சுருக்கி ‘சிஎம்’ என்றே அவரை அனைவரும் அழைத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸூடன் சர்கார் அமைத்த விஜய் தற்போது ‘CM’ஆகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Thalapathy 63: Vijay's character name in Atlee's film revealed

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.