Skip to main content

"தளபதி 63" ‍புதிய அப்டேட்: 6 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட கால்பந்து அரங்கம்! 

6 கோடி ரூபாய் மதிப்பில் கால்பந்து அரங்கம்! 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்காக பிரம்மாண்டமான கால்பந்து அரங்கம் அமைக்க 6 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அட்லீ - விஜய் இருவரும் ஏற்கனவே "தெறி", "மெர்சல்" உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

6 கோடி ரூபாய் மதிப்பில் கால்பந்து அரங்கம்! 

விஜயின் 63 வது படமான இப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு சி.மைக்கேல் என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பிரத்யேக காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான கால்பந்து அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்து வருகிறது. இதற்காக மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படத்தில் வரும் கால்பந்து சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் இந்த செட்டில் தான் படமாக திட்டமிடப்பட்டுள்ளது. 

"Thalapathy 63" makers spend whopping Rs 6 Crore on football stadium set.

​ thalapthy 63 ​    ​

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.