Skip to main content

தலைவர் பதவியில் இருந்து நடிகர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா!!!

தலைவர் பதவியில் இருந்து நடிகர் பாக்யராஜ் திடீர் ராஜினாமா!!!

'சர்கார்' பட விவகாரத்தில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்திய நடிகர் பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டார் என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் தெரிவித்தார்.

தனது செங்கோல் கதையின் மூலக்கருவை எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் பயன்படுத்தியுள்ளதாக வருண் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரகத்தில் படக்குழுவினர் மறுத்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் இதை விசாரித்தார்.

விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் வருண் ராஜேந்திரன் தனது கதைக்காக இழப்பீடும், தலைப்பில் தனது பெயரையும் போடக் கோரிக்கை வைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக பாக்யராஜின் வாக்குமூலம் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் ’சர்கார்’ கதையும், செங்கோல் கதையும் ஒன்று என்று அவர் பேட்டி அளித்தார்.

இதற்கிடையே முருகதாஸ், வருண் ராஜேந்திரனை வைத்து சமாதானம் பேசிய பாக்யராஜ் பிரச்சினையை சுமுகமாக முடித்து வைத்தார். இந்தப் பிரச்சினையில் 'சர்கார்' கதையின் கருவை வெளியே சொன்னதாகவும், வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக இருந்ததாகவும் பாக்யராஜ் மீது படக்குழுவினருக்கு மனவருத்தம் இருந்தது.

மறுபுறம் விஜய் ரசிகர்கள் பாக்யராஜையும், அவர் மகன் சாந்தனுவையும் ஃபேஸ்புக், ட்விட்டரில் வறுத்தெடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாக்யராஜ் இதை வெளிப்படையாகவே தனது பேட்டியில் தெரிவித்து தனது மகனே விஜய் ரசிகர் அவரது எதிர்ப்புக்கும் ஆளானேன், ஆனாலும் ஒரு துணை இயக்குநருக்காக நியாயம் செய்தேன் என்பதில் பெருமிதமாக உள்ளது என்று பேட்டி அளித்திருந்தார்.

ஒருபக்கம் விஜய் ரசிகர்களால் பாக்யராஜ் வெறுக்கப்பட்டாலும், அவர் பெரிய நிறுவனம், பெரிய நடிகரை எதிர்த்து நியாயத்தின் பக்கம் நின்றதற்காக பாராட்டு குவிந்தது. இந்நிலையில் இன்று திடீரென பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். பாக்யராஜுக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டதன் விளைவாகவே தனது பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமவை திரும்பப் பெறுவாரா? அல்லது வேறு தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது இனிதான் தெரியவரும்.

K Bhagyaraj has resigned from the post of president in South Indian Film Writers' Association.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.