Skip to main content

திடீர் நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி!

நெஞ்சுவலி காரணமாக லாரா மும்பை குளோபல் மருத்துவமனை அனுமதி!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன்களுள் ஒருவரான பிரைன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரா அந்நாட்டு அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் நெஞ்சு வலி காரணமாக லாரா இன்று மதியம் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளின் பணிகளுக்காக லாரா இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

50 வயதை எட்டிய பிரைன் லாரா, வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் ஆட்டமிழக்காமல் அதிகபட்ச தனிநபர் 501 ரன்கள் எடுத்து உலக சாதனையைப் படைத்துள்ளார் மற்றும் டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

brian lara

1990 முதல் 2007 வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக லாரா 131 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

131 டெஸ்ட் போட்டிகளில், பிரைன் லாரா 34 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் உட்பட 11953 ரன்கள் எடுத்துள்ளார். 

299 ஒருநாள் போட்டிகளில், லாரா 19 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் உட்பட 10405 ரன்கள் எடுத்துள்ளார்.

West Indies batting legend Brian Lara admitted to hospital in Mumbai

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.