Skip to main content

திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு காத்திருக்கும் சவால்

ஏ.கே. போஸ்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஏ.கே. போஸ் இறந்த நிலையில், அந்த தொகுதிக்கான பதவி காலியாகி விட்டது. ஆளும் அதிமுக அரசு அத்தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கடினமான சவாலை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.)சார்பில் மட்டுமல்லாமல், அதிமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தரப்பில் இருந்தும் கடுமையான போட்டியை அதிமுக எதிர்கொள்ள வேண்டும்.

வலுவான போட்டியாளர்கள்

அதிமுகவின் பாரம்பரிய கோட்டையாக திருப்பரங்குன்ற தொகுதி விளங்கினாலும், தற்போதைய சூழ்நிலை ஆளும் கட்சி குறித்த எண்ணங்களில் மக்கள் மனதில் மாற்று கருத்துக்கு வழிவகுத்துள்ளது.

"பாரம்பரியமாக, கட்சியானது வலுவான தலைவர்களின் தலைமையில் இருந்தது, அதுவே அதிமுக தொடர்ந்து அத்தொகுதியில் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆனால் தற்போது சரியான தலைமை இல்லை. அதேவேளையில் அதிமுகவின் போட்டி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரனுக்கு மக்களிடையே சில ஈர்ப்பு உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் நிச்சயமாக ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கின்றன" என அரசியல் மற்றும் மேம்பாட்டு நிர்வாகத் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜி. பழனித்துரை காந்தி கிராம கல்வி நிறுவனம் கூறினார்.

ஆண்டிபட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன்  "R.K. நகர் " தொகுதியில் வெற்றி பெற்றதை போல் இத்தொகுதியில் வெற்றிபெறுவோம் என்று கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் மதுரை முன்னாள் மூத்த தலைவர் கூறுகையில், கட்சியின் வாக்குகளை சிதறடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படாது என்றார்.

The challenges are waiting for ADMK in Thiruparankundram By elections

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.